100% கடனை திருப்பித் தருகிறேன் என்று சொன்னாலும் வங்கிகள் ஏற்காதது ஏன்?: விஜய்  மல்லையா மீண்டும் கேள்வி 

நான் 100% வங்கிக் கடனை திருப்பி செலுத்திவிடுகிறேன் எனக் கூறியும் வங்கிகள் அதனை ஏற்றுக் கொள்ளாதது ஏன் என்று  மல்லையா மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
100% கடனை திருப்பித் தருகிறேன் என்று சொன்னாலும் வங்கிகள் ஏற்காதது ஏன்?: விஜய்  மல்லையா மீண்டும் கேள்வி 

லண்டன்:  நான் 100% வங்கிக் கடனை திருப்பி செலுத்திவிடுகிறேன் எனக் கூறியும் வங்கிகள் அதனை ஏற்றுக் கொள்ளாதது ஏன் என்று  மல்லையா மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளிடமிருந்து ரூ.9000 கோடி அளவுக்கு பண மோசடி செய்து விட்டு லண்டனுக்கு தப்பி ஓடி விட்டார். அவரை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு வரும் முயற்சிகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் நான் 100% வங்கிக் கடனை திருப்பி செலுத்திவிடுகிறேன் எனக் கூறியும் வங்கிகள் அதனை ஏற்றுக் கொள்ளாதது ஏன் என்று  மல்லையா மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் வீழ்ச்சி தொடர்பான பல்வேறு தொலைக்காட்சி விவாத நிகழ்வுகளை பார்த்தேன். அதில் ஊழியர்கள் சம்பளம் பெறாத விவகாரம், வேலையின்மை, வேதனை, வங்கியிலிருக்கும் செக்யூரிட்டி, மீட்டெழுவதற்கான வாய்ப்பு என பல்வேறு விஷ்யங்கள் குறித்து விவாதம் நடக்கிறது. ஆனால் இங்கு நான் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தொடர்பான வங்கி கடன்களை 100 சதவீதம் திருப்பி செலுத்திவிடுகிறேன் எனக் கூறுகிறேன், ஆனால் வங்கிகள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லையே ஏன்?

இந்தியாவில் கிங்பிஷர் உள்பட பல்வேறு விமான நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. முன்னர் நினைத்தே பார்த்திருக்க முடியாத விஷயமாக இருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவன சரிவும் நிகழ்ந்துள்ளது. இவையெல்லாம் முழுக்க வர்த்தக தோல்விகளாகும். ஆனால் 100 சதவிதம் கடன்களை திருப்பிச் செலுத்தி விடுகிறேன் என்று கூறியும், சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு என் மீது மட்டும் குற்ற வழக்குகளை தொடர்ந்துள்ளன. ஏன் என்னை மட்டும்? என்பது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com