அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப் பட்டியல் வெளியீடு: 19 லட்சம் பேர் நீக்கம்

அண்டை நாடுகளில் இருந்து குடியேறுபவர்களை அடையாளம் காணும் வகையில், அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப் பட்டியல் இன்று
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப் பட்டியல் வெளியீடு: 19 லட்சம் பேர் நீக்கம்


அண்டை நாடுகளில் இருந்து குடியேறுபவர்களை அடையாளம் காணும் வகையில், அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக குடியேறி வசிப்பவர்களை அடையாளம் கண்டறிவதற்காக அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் விடுபட்டிருந்ததாக புகார் எழுந்தது. 

இந்நிலையில், இதன் இறுதிப் பட்டியல் இன்று சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இணையதளத்தில் வெளியிடப்பட்ட இப் பட்டியலில் 3 கோடியே 11 லட்சம் மக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் 19 லட்சத்து 6 ஆயிரம் போ் விடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, அம்மாநிலத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன. பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநில மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார். பட்டியலில் விடுபட்ட மக்கள், மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com