நாட்டில் நடப்பதை தான் ராகுல் விமர்சித்திருக்கார் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார். இதுதொடர்பாக மக்களவையில் வெள்ளிக்கிழமை அவர் பேசியதாவது,
பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிடும் மேக் இன் இந்தியா (உள்நாட்டு தயாரிப்பு) திட்டத்தை அனைவரும் மதிக்கிறோம். ஆனால், இன்றைய சூழலில் நாட்டில் என்ன ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது? அதை தான் ராகுலும் சுட்டிக்காட்டி விமர்சித்தார். இதில் துரதிருஷ்டவசமாக பிரதமர் கூறியது நடைபெறவில்லை, மாறாக நாட்டிலுள்ள சிறுமிகள் முதல் பெண்கள் வரை பாலியல் வன்கொடுமை துன்பங்களுக்கு உள்ளாகி வருவது தான் உண்மை. இதுவே அனைவரின் இன்றைய கவலையாக உள்ளது என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஜார்க்கண்ட் மாநிலத்தின் கொட்டா எனுமிடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் கலந்துகொண்டார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, ''மேக் இன் இந்தியா'' என்று கூறி வந்தார். ஆனால் தற்போது ''ரேப் இன் இந்தியா'' எனும் நிலைமை ஏற்பட்டுள்ளது என பாலியல் வன்கொடுமை சம்பவங்களை மையப்படுத்தி விமர்சித்தார்.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட வேண்டும் என்பது போன்று ராகுல் பேசியுள்ளார். ஒரு நாட்டின் தலைவர் இதுபோன்று பேசுவது வரலாற்றிலேயே இதுதான் முதன்முறையாக இருக்கும். ராகுலின் இந்த விமர்சனம் நாட்டிலுள்ள பெண்களை அவமதிக்கும் விதமாக உள்ளது. இதன்மூலம் நாட்டு மக்களுக்கு ராகுல் என்ன கூற நினைக்கிறார்? என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


