ரேப் இன் இந்தியா: ராகுல் பேச்சு மக்களவையில் எதிரொலி; கடும் அமளி

ஜார்க்கண்டில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் பேசுகையில், இந்தியாவில் எங்கு பார்த்தாலும் ரேப் இன் இந்தியா போல உள்ளது என்று கூறியது மக்களவையில் இன்று எதிரொலித்தது.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி


புது தில்லி: ஜார்க்கண்டில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் பேசுகையில், இந்தியாவில் எங்கு பார்த்தாலும் ரேப் இன் இந்தியா போல உள்ளது என்று கூறியது மக்களவையில் இன்று எதிரொலித்தது.

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையின் 81 இடங்களுக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் வரும் 20-ஆம் தேதி வரை 5 கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக, காங்கிரஸ்-ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்)-ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. 

இதையொட்டி, ராஜ்மஹால் மற்றும் மஹகமா பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜேஎம்எம் வேட்பாளா்களை ஆதரித்து ராகுல் காந்தி பேசினார்.

அப்போது, பிரதமர் மோடி மேக் இன் இந்தியா பற்றி பேசி வருகிறார். ஆனால், இந்தியாவில் எங்கு பார்த்தாலும் ரேப் இன் இந்தியா போல உள்ளது என்று கூறியிருந்தார்.

மக்களவை இன்று காலை கூடியதும், ராகுலின் இந்த பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். ராகுல் தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மக்களவையின் முன் பாஜக பெண் எம்.பி.க்கள் நின்று கொண்டு ராகுலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.  இந்த அமளி காரணமாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com