
புது தில்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரசின் கேள்விகளுக்கு பதிலளிக்க அஞ்சி பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.,
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக பாஜக மீது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்றைய மக்களவை கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில் ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரசின் கேள்விகளுக்கு பதிலளிக்க அஞ்சி பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:
ரஃபேல் பேரம் தொடர்பான கோப்புகளில் இடம்பெற்றுள்ள விபரங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட வேண்டும்.
விவகாரத்தில் காங்கிரசின் கேள்விகளுக்கு பதிலளிக்க அஞ்சி பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வரவில்லை
எனது குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் அளிக்க இயலாமல் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக அவையில் பேசி வருகிறார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால், ரஃபேல் ஊழல் தொடர்பாக கிரிமினல் வழக்கு தொடரப்படும். குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.