தபால்துறை முதன்மைத் தேர்வு மொழிகளில் வருகிறது மாற்றம்: மத்திய அரசு அதிரடி

தபால்துறை முதன்மைத் தேர்வுகளில் இனி ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டும்தான் கேள்வித்தாள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தபால்துறை முதன்மைத் தேர்வு மொழிகளில் வருகிறது மாற்றம்: மத்திய அரசு அதிரடி

புது தில்லி: தபால்துறை முதன்மைத் தேர்வுகளில் இனி ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டும்தான் கேள்வித்தாள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூ றப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் இருக்கக்கூடிய தபால்காரர், அஞ்சலக உதவியாளர், அஞ்சல் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை எழுத்துத்தேர்வு மூலம் மத்திய தொலைத்தொடர்புத்துறை நிரப்பி வருகிறது.

இந்நிலையில் தற்போது இத்தகைய பணியிடங்களில் சேருவதற்காக தேர்வு எழுதும் முறையில் புதிய மாற்றங்களை தொலைத்தொடர்புத்துறை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு பிரிவுகளாக நடைபெறக்கூடிய எழுத்துத் தேர்வில், மொழியை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இதுவரை முதன்மைப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் தாள் தேர்வானது, முன்னர் ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லது மாநில மொழிகளில் எழுதலாம். இந்நிலையில் இந்த தேர்வு இனி முழுவதும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் தாள் தேர்வானது ஆங்கிலம் மற்றும் தேர்வர்கள் விரும்பும் மாநில மொழிகளில் நடைபெறும். இப்புதிய தேர்வு முறை உடனடியாக அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com