Enable Javscript for better performance
ஜார்க்கண்ட் மாநில எல்லையில் மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் ஐந்து போலீசார் பலி- Dinamani

சுடச்சுட

    

    ஜார்க்கண்ட் மாநில எல்லையில் மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் ஐந்து போலீசார் பலி 

    By DIN  |   Published on : 14th June 2019 09:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    maoists

     

    ஜம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநில எல்லையில் ரோந்துப் பணியில் இருந்த போலீசார் மீது மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் ஐந்து போலீசார் பலியாகினர்.

    மேற்கு வங்காளம் - ஜார்க்கண்ட் மாநில எல்லையில் அமைந்துள்ளது சாராய்காலா மாவட்டம். இங்கு வெள்ளியன்று மாலை சந்தைப் பகுதியின்றில் போலீசார் வழக்கமான ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர். அப்போது மறைந்திருந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த திடீர் தாக்குதலில் 5 போலீசார் உயிரிழந்தனர். அத்துடன் போலீசாரிடம் இருந்து ஆயுதங்களையும் மாவோயிஸ்ட்கள் பறித்துச் சென்றனர்.

    தற்போது அங்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஜார்க்கண்ட் முதல்வர் ராகுபார் தாஸ் கிடைக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai