மஹாபாரதமும், ராமாயணமும் ஹிந்து பயங்கரவாதம்: சீதாராம் யெச்சூரி

மஹாபாரதமும், ராமாயணமும் ஹிந்து பயங்கரவாதம் என்று மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டினார். 
மஹாபாரதமும், ராமாயணமும் ஹிந்து பயங்கரவாதம்: சீதாராம் யெச்சூரி

மஹாபாரதமும், ராமாயணமும் ஹிந்து பயங்கரவாதம் என்று மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஆதரவாக அவர் பிரசாரம் செய்தபோது கூறியதாவது:

ஹிந்துக்கள் யாரும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்று சாத்வி பிரக்யா சிங் தாகூர் கூறுகிறார். ஆனால், இந்நாட்டில் பல அரசர்கள் யுத்தங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஏன்? மஹாபாரதமும், ராமாயணமும் கூட வன்முறைகளால் நிறைந்தது தான்.

அதிலும் ஹிந்து பயங்கரவாதத்துக்கு அதுவே முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது. ஆனாலும் ஹிந்துக்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் என்று கூறுவது எவ்வகையில் ஏற்புடையது? அதிலும் சில குறிப்பிட்ட மதங்களை மட்டும் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்திவிட்டு, அதில் ஹிந்துக்கள் இல்லை என்பது எந்த வகையில் நியாயம்.

முதல்கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்தவுடன், பாஜக மீண்டும் தனது ஹிந்துத்துவ பரப்புரைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டது. 370 சட்டப்பிரிவை நீக்குவோம், ராமர் கோயில் அமைப்போம், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம், என்ஆர்சியை ஏற்படுத்துவோம் என்று அதே பழைய பிரசாரங்களை மீண்டும் முன்வைக்கத் தொடங்கிவிட்டது. அதிலும் குறிப்பாக மக்களின் உணர்வுகளை தூண்டுவதற்காகவே தேர்தலில் போட்டியட சாத்விக்கு பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.

மயூர அரசாங்கத்தின் போது பௌத்த சித்தாந்தங்கள் மட்டுமே அஹிம்சையை வலியுறுத்த தொடங்கின. குறிப்பாக இதர சமுதாயங்களை தாக்குவதன் மூலம் ஒருவன் தனது சொந்த சமுதாயத்தை தாக்குவதற்கு சமம் என்று அசோகர் குறிப்பிட்டுள்ளார். இதுதான் நமது கலாசாரம், பாஜக கூறுவது கிடையாது. ஹிந்துத்துவாவுக்கும் ஹிந்துயிஸத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று விநாயக் தாமோதர் சாவர்கர் கூட தெரிவித்துள்ளார்.

ஹிந்துத்துவா என்பது அரசியல் கட்டமைப்பு. ஹிந்துக்களை ஒன்றிணைத்து ஒரு ராணுவத்தை உருவாக்க எடுக்கப்பட்ட முயற்சி. அதில் அனைத்து ஹிந்து இளைஞர்களையும் இணைய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டனர். இந்த வகையில் தான் ஆர்எஸ்எஸ் கூட தோன்றியது என்று விமர்சித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com