சுடச்சுட

  

  சரியாக பிரதமர் யாருன்னு சொன்னா.. சாப்பாட்டு விலையில தள்ளுபடியாம்! 

  By IANS  |   Published on : 20th May 2019 05:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi_rahul

   

  புது தில்லி: இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்று சரியாக கணித்துச் சொல்பவர்களுக்கு அவர்கள் ஆர்டர் செய்யும் உணவு வகைகளின் விலையில் கணிசமான தள்ளுபடி வழங்கப்படுமென்று பிரபல நிறுவனம் அறிவித்துள்ளது.

  இந்தியாவில் அலைபேசி செயலி வழியாக உணவு வகைகளை வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து சாப்பிடும் சேவையை பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.  இந்த சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இத்தகைய நிறுவனங்களில் ஸோமாட்டோ முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.

  இந்நிலையில் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்று சரியாக கணித்துச் சொல்பவர்களுக்கு அவர்கள் ஆர்டர் செய்யும் உணவு வகைகளின் விலையில் கணிசமான தள்ளுபடி வழங்கப்படுமென்று ஸோமாட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.

  இதுதொடர்பாக அந்நிறுவனம் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

  மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் "ஸோமாட்டோ எலெக்ஷன் லீக்" என்னும் போட்டியை  அறிமுகப்படுத்துகிறோம்.  

  இந்த  போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்று சரியாக கணித்துச் சொல்பவர்களுக்கு அவர்கள் ஆர்டர் செய்யும் உணவு வகைகளின் விலையில் கணிசமான தள்ளுபடி வழங்கப்படும்.

  அதன்படி இந்த போட்டியில் இணைந்து உணவு வகைகளை ஆர்டர் செய்பவர்களுக்கு 40 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். ஒருவேளை அவர்களது கணிப்பு சரியாக அமைந்து விட்டால், அவர்களது ஆர்டர் தொகையின் மதிப்பில் 30 சதவீத தொகை 'கேஷ் பேக்' ஆகத் திரும்பக் கிடைக்கும்.        

  இந்த போட்டியில் கலந்து கொண்டு மே 22-ஆம் தேதி வரை தொடர்ந்து எத்தனை முறை ஆர்டர் செய்து தங்களது கணிப்பினைத் தெரிவித்தாலும், அத்தனை முறையும் அவர்களுக்கு 'கேஷ் பேக்' சலுகை கிடைக்கும்.

  பிரதமர் தேர்வு செய்யப்பட்ட பிறகு கலந்து கொண்டவர்களுக்கான சலுகைத் தொகை அவர்களது 'ஸோமாட்டோ வாலட்' கணக்கில் வரவு வைக்கப்படும்.

  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்னதாக ஐ.பி.எள் போட்டிகளின் போது இந்த் நிறுவனம் "ஸோமாட்டோ பிரீமியர் லீக்"  என்னும் போட்டியை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai