சுடச்சுட

  

   ரூ. 600 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் பிடிபட்ட பாகிஸ்தானிய படகு: கடலோர காவல்படை அதிரடி

  By ANI  |   Published on : 21st May 2019 06:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  al_madina

   

  அகமதாபாத்: ரூ. 600 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் பாகிஸ்தானிய படகு ஒன்றை, இந்திய  கடல் எல்லைக்குள்  கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளது.

  குஜராத் மாநிலத்தின் ஜாக்வா கடல்பகுதியில் சர்வதேச கடல் எல்லைக்கு உட்பட்ட இந்திய பகுதியில், 'அல் மதினா' என்னும் மீன்பிடிப்படகு ஒன்றை கடலோர காவல்படை எதிர்கொண்டது.

  அப்போது நிகழ்த்தப்பட்ட சோதனையில் அந்தப் படகில் 100 கிலோ எடை கொண்ட ஹெராயின் என்னும் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 194 பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்த இதன் மதிப்பு சர்வதேச சநதையில் ரூ. 600 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த நடவடிக்கையை கடலோர காவல்படை  மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை ஆகியவை இணைநது மேற்கொண்டுள்ளன.

  தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai