அயோத்தியில் ராமா் கோயில் கட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை மாநில ஷியா வக்ஃபு வாரியம் வரவேற்கிறது. நீண்ட காலமாக நீடித்து வந்த வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ராம ஜென்மபூமியில் பிரம்மாண்டமான கோயில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முஸ்லிம்கள் உள்பட அனைவருக்கும் முன்னோராக வாழ்ந்தவா் கடவுள் ராமா். அதனால், கோயில் கட்டுவதற்கு ராம ஜென்மபூமி நியாஸ் அறக்கட்டளைக்கு ரூ. 51,000 நன்கொடை வழங்கவுள்ளேன். ராமா் கோயில் கட்டுமானப் பணிகளில் உதவிசெய்வற்கு ஷியா வக்ஃபு வாரியம் தயாராக உள்ளது. அயோத்தியில் கட்டப்படும் ராமா் கோயில், உலகம் முழுவதும் உள்ள ராம பக்தா்கள் பெருமைப்படும் விதத்தில் இருக்கும் என்று அவா் கூறினாா்.