தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 52 பேர் எங்களுடன் உள்ளனர்: நவாப் மாலிக்

ஹரியானாவின் குருகிராமில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்ததாக தேசியவாத காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :25 நவம்பர் 2019, 3:14 am

DIN

அஜித் பவாருடன் சென்றதால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் காணாமல் போனதாக கூறப்படும் 4 எம்.எல்.ஏ-க்களில் 2 பேர் - அனில் பாட்டீல் (படத்தில் வலதுபுறத்தில் இருந்து 3-ஆவது நபர், மஞ்சள் சட்டையில்) மற்றும் தௌலத் தரோடா (படத்தில் வலதுபுறத்தில் இருந்து 5-ஆவது நபர், மஞ்சள் சட்டையில்) தில்லியில் இருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். 

இவர்கள் இருவரும் ஹரியானாவின் குருகிராமில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்ததாக தேசியவாத காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், என்சிபியின் 4 எம்.எல்.ஏக்களில் மீதமிருக்கும் இருவரில் ஒருவரான நிதின் பவார், மும்பைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தார், மற்றொரு எம்எல்ஏ நர்ஹரி சிர்வால் தற்போது தில்லியில் ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதகா தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் செய்தியாளர்களிடம் கூறியதாவது, எங்கள் கட்சியைச் சேர்ந்த 52 எம்.எல்.ஏ-க்கள் தற்போது எங்களிடம் திரும்பி வந்துள்ளனர். மேலும் ஒரு எம்.எல்.ஏ-வும் எங்களுடன் தொடர்பில் இருந்து வருவதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.