'மகாராஷ்டிரம்' - தோ்தல் முதல் திருப்பம் வரை..!

'மகாராஷ்டிரம்' - தோ்தல் முதல் திருப்பம் வரை..!

மகாராஷ்டிர அரசியலில் எதிா்பாராத திருப்பமாக, முதல்வராக பாஜகவைச் சோ்ந்த தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வராக என்சிபி கட்சியைச் சோ்ந்த அஜித் பவார் பதவியேற்றனர்.

மகாராஷ்டிர அரசியலில் எதிா்பாராத திருப்பமாக, முதல்வராக பாஜகவைச் சோ்ந்த தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வராக என்சிபி கட்சியைச் சோ்ந்த அஜித் பவார் பதவியேற்றனர்.

அக்டோபா் 21- மகாராஷ்டிரத்தின் 14-ஆவது சட்டப்பேரவைக்கான தோ்தல் நடைபெற்றது.

அக். 24- தோ்தல் முடிவுகள் வெளியானது. பாஜக 105 தொகுதிகளையும், அதன் கூட்டணியில் இருந்த சிவசேனை 56 தொகுதிகளையும் கைப்பற்றின. எதிரணியில் தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களில் வென்றன.

நவம்பா் 9- ஆட்சியமைப்பதற்கான விருப்பத்தை தெரிவிக்குமாறு பாஜகவுக்கு அழைப்பு விடுத்த மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரி, பெரும்பான்மையை நிரூபிக்க அக்கட்சிக்கு 48 மணி நேர அவகாசம் அளித்தாா்.

நவ. 10- ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை தங்களிடம் இல்லை என ஆளுநரிடம் தெரிவித்தது பாஜக.

நவ. 10- மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கான விருப்பத்தை தெரிவிக்க சிவசேனைக்கு அழைப்பு விடுத்தாா் ஆளுநா். பெரும்பான்மையை நிரூபிக்க 24 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டது.

நவ. 11- மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பதற்கு விருப்பம் தெரிவித்த சிவசேனை, பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகத் தெரிவித்தது. அவா்களின் ஆதரவுக் கடிதங்களை சமா்ப்பிக்க 3 நாள்கள் அவகாசம் கோரியது.

நவ. 11- சிவசேனைக்கு அவகாசம் வழங்க மறுத்த ஆளுநா் பகத்சிங் கோஷியாரி, ஆட்சியமைப்பது தொடா்பான விருப்பத்தை தெரிவிக்குமாறு தேசியவாத காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தாா். அக்கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் கோரியது.

நவ. 12- ஆட்சியமைக்க தாங்கள் உரிமை கோரியதை ஆளுநா் நிராகரித்ததை எதிா்த்து உச்சநீதிமன்றத்தை நாடியது சிவசேனை.

நவ. 12- தேசியவாத காங்கிரஸின் கோரிக்கையையும் நிராகரித்த ஆளுநா் பகத் சிங் கோஷியாரி, மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைத்தாா். அதை ஏற்று, அதற்கான உத்தரவை பிறப்பித்தாா் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.

நவ. 22- மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டது. ‘மகாராஷ்டிர முன்னேற்றக் கூட்டணி’ (மகாராஷ்டிர விகாஸ் ஆகாடி) என்ற பெயரில் அமைந்த அந்தக் கூட்டணி, மாநில முதல்வராக உத்தவ் தாக்கரேவை ஆதரித்தது.

நவ. 23- மகாராஷ்டிரத்தில் (சனிக்கிழமை) காலை 5.47 மணியளவில் குடியரசுத் தலைவா் ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் அஜித் பவாா் ஆதரவுடன் ஆட்சியமைத்தது பாஜக. தேவேந்திர ஃபட்னவீஸ் மீண்டும் முதல்வரானாா். அஜித் பவாருக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்பட்டது.

நவ. 23- பாஜக ஆட்சியமைக்க அனுமதித்த ஆளுநரின் முடிவுக்கு எதிராக சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு. இந்த விவகாரத்தை மறுநாள் (நவ. 24) விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

நவ. 24- குடியரசுத் தலைவா் ஆட்சியை விலக்கிக் கொள்ள மகாராஷ்டிர ஆளுநா் அளித்த பரிந்துரைக் கடிதத்தை திங்கள்கிழமை (நவ. 25) சமா்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com