ஜம்மு-காஷ்மீரின் நிலைமையை ஆய்வு செய்தார் அமித் ஷா

ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை ஆய்வு செய்தார். 
ஜம்மு-காஷ்மீரின் நிலைமையை ஆய்வு செய்தார் அமித் ஷா

ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை ஆய்வு செய்தார். 
ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்காக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 230 பயங்கரவாதிகள் தயார்நிலையில் இருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து அமித் ஷா தில்லியில் ஆய்வு நடத்தினார். இதில், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கேபினட் செயலர் ராஜீவ் கெளபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து அவர்கள் அமித் ஷாவிடம் விளக்கினர். இந்த ஆய்வுக் கூட்டம் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது.
இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், ""இந்தக் கூட்டத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமித் ஷாவிடம் விளக்கமளிக்கப்பட்டது'' என்றார். 
ராணுவத் தளபதி கே.ஜே.எஸ். தில்லான் அண்மையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""எல்லைப் பகுதியில் ஊடுருவல் முயற்சிகள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. பூஞ்ச், ரஜெளரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவிலான ஊடுருவல்கள் நடைபெறுகின்றன. பாதுகாப்புப் படையினர் அனுதினமும் அவர்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள பயங்கரவாத இயக்கங்களின் முகாம்களில் பயங்கரவாதிகள் பலர், இந்தியாவுக்குள் ஊடுருவ தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன'' என்றார்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த மாதம் 5-ஆம் தேதி நீக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com