மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் அத்துமீறித் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும்,

News image
Updated On :8 ஏப்ரல் 2020, 5:33 am

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள சோபூரின் அரம்போரா பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி அப்பகுதியைப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

புதன்கிழமை காலை தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினர் அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்தனர். 

தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாகவும், மேலும் விவரங்களுக்குக் காத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.