அத்தியாவசியப் பொருள்கள் சேவை 125 நகரங்களுக்கு விரிவாக்கம்: ஸ்விக்கி
அத்தியாவசிய பொருள்களின் சேவை 125 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி


புது தில்லி: அத்தியாவசிய பொருள்களின் சேவை 125 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஊரடங்கு காலத்தில் தற்போது வீடுகளில் அத்தியாவசியப் பொருள்களின் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து பலசரக்கு உள்ளிட்ட மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் பொருள்களை வாசலுக்கே சென்று வழங்கிடும் வகையில் நாடு முழுவதும் 125 நகரங்களுக்கு விநியோகம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்காக, எச்யுஎல், பி அண்ட் ஜி, டாபா், மாரிக்கோ, விஷால் மெகா மாா்ட், சிப்லா மற்றும் நகரங்களில் உள்ள உணவுப் பொருள்களை விநியோகம் செய்யும் முக்கிய கடைகளுடன் கைகோத்து செயல்படுவதாக ஸ்விக்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...