மருத்துவமனைக்குள் நுழைந்த சிறுத்தை: குஜராத்தில் பரபரப்பு
குஜராத்தில் மருத்துவமனை ஒன்றில் சிறுத்தை நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


குஜராத்தில் மருத்துவமனை ஒன்றில் சிறுத்தை நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குஜராத் மாநிலம், கோலவாடாவில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் நேற்றிரவு சிறுத்தை ஒன்று நுழைந்தது. இதனைக்கண்ட மருத்துவமனை ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த சிறுத்தையை கழிவறையில் வைத்து பூட்டினர்.
பின்னர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்த வனத்துறையினர், மருத்துவமனை ஊழியர்களுடன் இணைந்து சிறுத்தையை பிடித்தனர்.
இதனால் மருத்துவமனையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...