மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மே மத்தியில் இந்தியாவில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 38ஆயிரமாக அதிகரிக்கும்: ஆய்வு கணிப்பு

இந்தியாவில் மே மாத மத்தியில் கரோனாவால் பலியானேரின் எண்ணிக்கை 38ஆயிரமாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

இந்தியாவில் மே மாத மத்தியில் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 38ஆயிரமாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கரோனாவால் ஏற்படும் பாதிப்பு இந்தியாவில் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,409 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்த வைரஸால் இத்துடன் 21,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 681பேர் பலியாகி உள்ளனர். 

நாட்டிலேயே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் 778 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,427-ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே மே 3ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வருகிற 27ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். 

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சிக் கழகம், இந்திய அறிவியல் நிறுவனம், மும்பையில் உள்ள ஐஐடி மற்றும் புனேவில் உள்ள ராணுவத்திற்கான மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து இந்தியாவில் கரோனா பாதிப்புகள் மே மாதத்தில் எத்தகைய நிலையில் இருக்கும் என்கிற கணிப்பை வெளியிட்டுள்ளன. அதில் மே மாத மத்தியில் 38 ஆயிரத்து 220 பேர் கரோனாவால் பலியாகலாம் என்றும் 30 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் சுமார் 70 ஆயிரம் பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமாக நிலையில் இருக்கலாம் எனவும் அந்த புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தாலி மற்றும் அமெரிக்காவில் கரோனா பாதிப்புகள் பன்மடங்கு அதிகரித்ததன் விகிதாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புள்ளி விவரம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.