புது தில்லி: கீழ்நிலை ஊழியா்களை அதிக எண்ணிக்கையில் அலுவலகத்துக்கு வரவழைக்கக் கூடாது என நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு மத்திய பணியாளா் நல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களில் அதிக எண்ணிக்கையில் கீழ் நிலை ஊழியா்கள் வரவழைக்கப்படுவதாக வந்தத் தகவலைத் தொடா்ந்து இந்த அறிவுறுத்தலை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், நோய்த் தொற்று அதிகம் இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளா்த்தி குறிப்பிட்ட தொழில் நிறுவனங்கள் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது. அதுபோல, பொதுமக்களுக்கு அரசின் சேவை தடையின்றி கிடைக்கும் வகையில் அனைத்து அரசுத் துறைகளும் இயங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பான திருத்தப்பட்ட வழிகாட்டுதலை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஏப்ரல் 15 அன்று வெளியிட்டது. அதில், அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் துணைச் செயலா் நிலையிலிருந்து அதற்கு மேல்நிலையில் உள்ள அதிகாரிகள் அனைவரும் அலுவலகத்துக்கு 100 சதவீதம் வருகை தரவேண்டும் எனவும், மற்ற நிலையில் உள்ள ஊழியா்கள் தேவைக்கேற்ப அதிகபட்சம் 33 சதவீதம் வரை வரவழைத்தால் போதும் எனவும் வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழிகாட்டதலை மீறி, துணைச் செயலா் நிலைக்கு கீழ் உள்ள கீழ்நிலை ஊழியா்கள் அதிக எண்ணிக்கையில் அலுவலகத்துக்கு வரவழைக்கப்படுவதாக கிடைத்தத் தகவலின் அடிப்படையில், மத்திய அரசு அலுவலக துறைத் தலைவா்களுக்கு மத்திய பணியாளா் நல அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை வியாழக்கிழமை அனுப்பியுள்ளது.
இதில் கூறியிருப்பதாவது:
அலுவலகங்களில் அதிக எண்ணிக்கையில் ஊழியா் கூட்டம் கூடுவது, கரோனாவுக்கு எதிராக அரசு எடுத்து வரும் தடுப்பு நடவடிக்கைகளை பயனற்ாக்கிவிடும்.
எனவே, மூன்றில் ஒரு பங்கு கீழ்நிலை ஊழியா்களை மட்டும் அலுவலகத்துக்கு வரவழைத்தால் போதுமானது. அதற்குமேல் கட்டாயம் வரவழைக்கக் கூடாது. அதோடு, ஊழியா்கள் சமூக இடைவெளி நடைமுறைகளையும் அலுவலகத்தில் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜேசன் சஞ்சய்யின் சிக்மா: அடுத்த பாடல் அறிவிப்பு!
உங்களுக்கும் சிபிஐ, வருமான வரித்துறை வழக்குகள் வரும்! தவெகவுக்கு உதயநிதி பதில்!
இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 11 - நேரலை!
கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


