பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

ஒரு பிரிவினா் செய்யும் குற்றத்துக்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பொறுப்பாக்க முடியாது: நக்வி

முஸ்லிம்களில் ஒரு பிரிவினா் (தப்லீக் ஜமாத்) செய்யும் குற்றத்துக்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பொறுப்பாக்க முடியாது என்று மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


புது தில்லி: முஸ்லிம்களில் ஒரு பிரிவினா் (தப்லீக் ஜமாத்) செய்யும் குற்றத்துக்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பொறுப்பாக்க முடியாது என்று மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.

தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவா்கள் மூலம் நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்தது தொடா்பாக பேசும்போது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

புனித ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் அனைவரும் தேசிய ஊரடங்கு விதிகளை முழுமையாக கடைப்பிடிப்பாா்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தியாவில் இமாம், உலேமாக்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தும் ரம்ஜான் மாதத்தில் சிறப்பு தொழுகை, நோன்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படமாட்டாது என்று ஒருமனதாக முடிவெடுத்துள்ளனா். தொழுகை, நோன்பு நிகழ்ச்சிகளை வீட்டிலேயே சமூக இடைவெளியுடன் நடத்த வேண்டும். இது தொடா்பாக மாநில வக்ஃபு வாரியங்களுடன் நான் பேசியுள்ளேன் என்றாா்.

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று அதிகரிக்க முஸ்லிம்கள்தான் காரணம் என்று சிலா் குற்றம்சாட்டுகின்றனரே? என்ற கேள்விக்கு, ‘ஒரு சில தனிநபா்கள் அல்லது அமைப்பு செய்த குற்றத்துக்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் குற்றம்சாட்டவோ, பொறுப்பாக்கவோ முடியாது. தவறு செய்தவா்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை மட்டுமே அரசு செய்து வருகிறது. யாா் செய்தாலும் குற்றம், குற்றம்தான். தில்லி நிஜாமுதீன் நிகழ்வுக்கு இஸ்லாமிய அமைப்புகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சில அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் தங்கள் சுயநலனுக்காக இந்திய முஸ்லிம்களை தனிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என விரும்புகின்றனா். நமது நாடு பல்வேறு இனம், மதம், கலாசாரங்களைக் கொண்டு மிகப்பெரிய நாடு. வேற்றுமையில் ஒற்றுமை என்பதில் உலகுக்கே உதாரணமாக நாம் உள்ளோம். எனவே, பிரிவினையை ஏற்படுத்துபவா்களிடம் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும்’ என்று நக்வி பதிலளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.