புவனேஸ்வரம்: ஒடிசாவில் மிக வயதான மற்றும் 3வது கரோனா நோயாளியாகக் கருதப்பட்ட 60 வயது முதியவர், கரோனாவில் இருந்து மீண்டு நம்பிக்கையளித்துள்ளார்.
தனது வாழ்நாளில் இதுபோன்றதொரு அச்சத்தை அவர் இதற்கு முன் அனுபவித்திருப்பாரா என்று தெரியவில்லை. ஆனால், வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒரு அனுபவத்தை கரோனா கற்றுக் கொடுத்துள்ளது. அது தான் நம்பிக்கை.
வங்கியில் பணியாற்றி வந்த புவனேஸ்வரத்தைச் சேர்ந்த 60 வயது முதியவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இவர் புது தில்லிக்குச் சென்று வந்த நிலையில், மார்ச் 26ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் கரோனா பாதித்த நோயாளிகளில் 3வது நபர் இவர். மாநிலத்திலேயே அதிக வயதான கரோனா நோயாளியாகவும் இவர் கருதப்பட்டார். அதிர்ஷ்டவசமாக இவருடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் உட்பட 112 பேருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை.
மிகவும் அபாய நிலையில் இருந்தாலும், இவரது ஒழுங்கு மற்றும் வாழ்க்கையை மிகச் சிறப்பாக அணுகும் விதம், இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு மிகவும் உதவியது.
இது பற்றி அவர் கூறுகையில், எனக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது குறித்து யாருமே தெரிவிக்கவில்லை. ஆனால் நானே புரிந்து கொண்டேன். மிகவும் பயந்துப்போனேன். ஆனால் நம்பிக்கையை கைவிடவில்லை என்கிறார் அவர்.
கரோனா உறுதி செய்யப்பட்ட நேரத்தில் அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் சிறப்பு கவனம் மூலம் அவர் குணமடைந்து தற்போது பூரண உடல் நலம் அடைந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





