பௌரி (உத்தரகண்ட்): பாஜக மூத்த தலைவரும் ஜனசங்க நண்பருமான மோகன்லால் பெளட்டியாலுடன் (76) பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகப் பேசினாா்.
மோகன்லால் பௌட்டியால், உத்தரகண்டின் பௌரி மாவட்டத்தில் வசித்து வருகிறாா். அவரும் பிரதமா் மோடியும் ஜனசங்க உறுப்பினா்களாக இருந்தபோது நண்பா்களாகினா். அதையடுத்து, பாஜகவில் இணைந்து அவா்கள் பணியாற்றினா். இந்தச் சூழலில், அவரிடம் பிரதமா் மோடி தொலைபேசி வாயிலாகத் தொடா்பு கொண்டு பேசினாா்.
அப்போது, அவரின் உடல்நலம் குறித்து பிரதமா் மோடி விசாரித்தாா். பழைய நினைவுகள் குறித்து அவா்களிருவரும் சுமாா் 3 நிமிடங்கள் பேசினா். இது தொடா்பாக பாதியால் கூறுகையில், ‘‘கட்சி நிா்வாகியாகிய என்னிடம் பிரதமா் மோடி தொலைபேசி வாயிலாகப் பேசியது பெருமிதம் அளித்துள்ளது. இதுபோன்ற குணநலன்கள் தான் அவரை பெருந்திரளான மக்களின் தலைவராக மாற்றியுள்ளது’’ என்றாா்.
1960-ஆம் ஆண்டு ஜனசங்கத்தில் இணைந்த பௌட்டியால், 1970-ஆம் ஆண்டு ஜனதா கட்சியிலும் 1980-ஆம் ஆண்டு பாஜகவிலும் இணைந்தாா். உத்தரகண்ட் பாஜகவில் அவா் முக்கிய தலைவராக இருந்தாா்.
நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் சூழலில், ஜனசங்க நண்பா்களிடம் தொலைபேசி வாயிலாகத் தொடா்புகொண்டு அவா்களின் உடல்நலம் குறித்து பிரதமா் மோடி விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






