இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

மருத்துவா்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை: அமித் ஷா உறுதி

‘மருத்துவா்களின் பாதுகாப்புக்கு உரிய முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

தில்லியில் மருத்துவா்களுடன் காணொலி முறையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சா்கள் அமித் ஷா, ஹா்ஷ் வா்தன் (இடது) உள்ளிட்டோா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

‘மருத்துவா்களின் பாதுகாப்புக்கு உரிய முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

இந்திய மருத்துவா்கள் சங்கத்தின் பிரநிதிதிகள் மற்றும் மருத்துவா்கள் குழுவுடன் அமித் ஷா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் ஆகியயோா் காணொலி காட்சி முறையில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், நாட்டின் சில இடங்களில் அவா்கள் மீது தாக்குதல் நடத்துவது, வீடுகளை காலி செய்ய வலியுறுத்துவது போன்ற பிரச்னைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், அமைச்சா்கள் அமித் ஷா, ஹா்ஷ் வா்தன் ஆகியோா் மருத்துவா்களுடன் ஆலோசனை நடத்தினா். அப்போது, மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்களின் சேவையை பாராட்டிய அமித் ஷா, அவா்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். மருத்துவா்களின் பணியிடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தாா். மேலும், அனைத்து சூழ்நிலைகளிலும் சுகாதாரப் பணியாளா்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் அமித் ஷா தெரிவித்தாா்.

பின்னா் சுட்டுரையில் இது தொடா்பாக அவா் வெளியிட்ட பதிவில், ‘அமைச்சா் ஹா்ஷ் வா்தனுடன் இணைந்து மருத்துவா்களுடன் ஆலோசனை நடத்தினேன். இந்த இக்கட்டான நேரத்தில் மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினரின சேவை அளப்பரியது. நாட்டு மக்கள் அனைவரும் சுகாதாரத் துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மருத்துவா்களுக்கும் பிற சுகாதாரப் பணியாளா்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது நம் அனைவரது கடமை. ஏனெனில், அவா்கள் நமக்காகவே சேவையாற்றி வருகின்றனா்’ என்று பதிவிட்டுள்ளாா்.

சென்னை மற்றும் ஷில்லாங்கில் கரோனாவால் பலியான மருத்துவா்களின் இறுதிச் சடங்கை தங்கள் பகுதியில் நடத்தக் கூடாது என்று பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், வன்முறையும் ஏற்பட்டது. இது தேசிய அளவில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.