நாசிக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கரோனா

நாசிக்கில் மாலேகான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு கரோனா நோய்த்..
நாசிக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கரோனா
Updated on
1 min read

நாசிக்கில் மாலேகான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இன்று காலை தொற்று நோய் பாதிக்கப்பட்டோரின் அறிக்கைகள் வெளியிடப்பட்டது. அதில், மாலேகான் நகரில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கரோனா இருப்பது அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கரோனா தொற்று காரணமாக இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், மேலும் மாலேகான் நகரில் புதிதாக ஆறு பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதால் அந்நகரம் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. 

மாலேகானில் இதுவரை 11 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மொத்தம் 116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த் தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com