மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசாவில் மேலும் 3 பேருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 103ஆக உயர்வு

ஒடிசாவில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :26 ஏப்ரல் 2020, 6:57 am

ஒடிசாவில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலமே தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது. 

இந்த நிலையில் ஒடிசாவில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் அங்கு கரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 103ஆக உயர்ந்துள்ளது. 

அவர்களின் 68 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 34 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திம்பியுள்ளனர். மேலும் அங்கு கரோனாவுக்கு இதுவரை ஒருவர் மட்டுமே பலியாகியுள்ளனர். தில்லியில் 2,625, மத்தியப் பிரதேசம் - 2,096, ராஜஸ்தான் - 2,141 தமிழகம் - 1,821 உத்தரப் பிரதேசம் - 1,793 ஆந்திரா - 1,061 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.