எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள் 11 பேருக்கு கரோனா: தகவல்

புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 11 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள் 11 பேருக்கு கரோனா: தகவல்
Updated on
1 min read

புது தில்லி: புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 11 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எய்ம்ஸ் மருத்துவமனையின் பதிவு அறையில் பணியாற்றி வந்த மேலும் 4 ஊழியர்களுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, எய்ம்ஸ் மருத்துவமனை வாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலருக்கும், எய்ம்ஸ் மருத்துவமனையின் சில பிரிவுகளில் பணியாற்றி வந்த இரண்டு செவிலியர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் ஒரு செவிலியரின் இரண்டு பிள்ளைகளுக்கும் கூட கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் தில்லியில் அபாயப் பகுதியாக அறிவிக்கப்பட்ட கோட்லா முபாரக்புர் பகுதியில் இருந்து தான் இவர்களுக்கு கரோனா தொற்றியிருக்கலாம் என்றும், கரோனா பாதித்த ஊழியர்களில் பெரும்பாலானோர் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com