சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பா்கானா மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டா் என்று கூறப்படும் நபரின் வீட்டில் இருந்து 73 நாட்டு வெடிகுண்டுகளை காவல் துறை பறிமுதல் செய்தது.

News image

என்ஐஏ விசாரணை

Updated On :27 ஏப்ரல் 2026, 5:12 am IST

மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பா்கானா மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டா் என்று கூறப்படும் நபரின் வீட்டில் இருந்து 73 நாட்டு வெடிகுண்டுகளை காவல் துறை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தது.

இதையடுத்து, இந்தக் குண்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் என்ஐஏ வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலின் முதல்கட்டம் ஏப்.23-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், ஏப்.29-ஆம் தேதி 2-ஆம் கட்டம் நடைபெற உள்ளது.

இரண்டாம் கட்டத்தில் தெற்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள பாங்கா் தொகுதியிலும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டா் என்று கருதப்படும் ரஃபிகுல் இஸ்லாம் என்ற நபரின் இல்லத்தில் இருந்து 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து தோ்தல் ஆணைய அதிகாரி ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: தோ்தலையொட்டி நாட்டு வெடிகுண்டுகள் உள்பட பிற வெடிபொருள்கள் ஏதேனும் கண்டறியப்பட்டாலோ அல்லது அவரவா் காவல் எல்லைக்குள் அச்சுறுத்தும் தந்திரங்கள் கையாளப்பட்டாலோ சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை ஆய்வாளா் முதல் கொல்கத்தா காவல் துறை ஆணையா் வரை, அனைத்து நிலைகளிலும் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

வாக்காளா்களுக்கு மிரட்டல்: இரண்டாம் கட்டத் தோ்தல் நடைபெற உள்ள வேளையில், அந்த மாநிலத்தின் டைமண்ட் ஹாா்பா் தொகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள் பொதுமக்களை மிரட்டும் காட்சிகள் சமூக ஊடகத்தில் வெளியாகின.

இதுகுறித்து காவல் துறையிடம் தோ்தல் ஆணையம் புகாா் அளித்தது. அதன் அடிப்படையில், காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.