இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,892-ஆக உயர்வு
இந்தியாவில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 26,917-லிருந்து 27,892-ஆக உயர்ந்துள்ளது.


இந்தியாவில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 26,917-லிருந்து 27,892-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 26,917-லிருந்து 27,892-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பலியானோரின் எண்ணிக்கை 826-லிருந்து 872-ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,914-லிருந்து 6,185-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,396 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர். 381 குணமடைந்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் 8,068 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு கரோனா பாதிப்பால் 1,076 பேர் குணமடைந்துள்ள நிலையில், 342 பேர் பலியாகியுள்ளனர். இதேபோல் குஜராத் - 3,301, டில்லி - 2,918, ராஜஸ்தான் - 2,185, மத்திய பிரதேசம் - 2,096 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...