குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 29,435 ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 29,435 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :28 ஏப்ரல் 2020, 3:47 am

DIN

இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 29,435 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 29435 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1543 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

62 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 934 ஆக உயர்ந்துள்ளது. 6869 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 8590 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

369 பேர் பலியாகியுள்ளனர். இதேபோல் குஜராத்தில் 3548 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 162 பேர் பலியாகியுள்ளனர். தலைநகர் தில்லியில் 3108 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 54 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.