அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

சண்டீகரில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று: மொத்த பாதிப்பு 67

சண்டீகரில் புதன்கிழமை மேலும் எட்டு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2020, 7:05 am

சண்டீகரில் புதன்கிழமை மேலும் எட்டு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. 

பிரிவு 26-இல் உள்ள பாபுதாம் காலணியில் புதிதாக 7 பேருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். மொத்தம் 22பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. பிரிவு 30-யிலும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மற்றொரு பகுதி, பிரிவு 30 ஆகும். இது பொருளாதாரத்தில் நலிந்த பகுதியாகும். இங்கு 14 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால், ஏற்கெனவே அப்பகுதி பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. 

பிஜிஐ அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பிரிவு 32இல் உள்ள மருத்துவமனை மற்றும் பிரிவு 16இல் உள்ள அரசு சிறப்பு மருத்துவமனையில் கரோனா வைரஸால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த நான்கு நாட்களில், இந்த மருத்துவமனைகளில் மூன்று மருத்துவர்கள், இரண்டு ஊழியர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.