தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி உணவகத்தில் சாம்பாரில் இறந்த பல்லி: வழக்குப் பதிவு

புது தில்லியில் கன்னௌட் பகுதியில் உள்ள தென்னிந்திய உணவகத்தில் பரிமாறப்பட்ட சம்பாரில் இறந்த பல்லியைப் பார்த்த வாடிக்கையாளர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

News image
தில்லி உணவகத்தில் சாம்பாரில் இறந்த பல்லி: வழக்குப் பதிவு
Updated On :3 ஆகஸ்ட் 2020, 12:25 pm

PTI


புது தில்லி: புது தில்லியில் கன்னௌட் பகுதியில் உள்ள தென்னிந்திய உணவகத்தில் பரிமாறப்பட்ட சம்பாரில் இறந்த பல்லியைப் பார்த்த வாடிக்கையாளர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றி காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, பங்கஜ் அகர்வால், புது தில்லியின் சாந்தினி சௌக்-ன் பதேஹ்புரி பகுதியில் உள்ள உணவகத்தில் உணவருந்த தனது இரண்டு நண்பர்களுடன் சென்றார்.

இரவு உணவுக்காக தோசையும், சாம்பாரும் வாங்கினர். அகர்வால் தோசையை உண்ண ஆரம்பித்தபோது, உணவகத்தில் வழங்கிய சாம்பாரில் செத்துப்போன சிறிய பல்லி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

உடனடியாக அதனை தனது செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்ட அகர்வால், உணவக மேலாளரிடம் இது பற்றி கேட்டார். அதற்கு இதுபோல மீண்டும் நடக்காது என்று அவர் உறுதி அளித்துள்ளார். 

எனினும் இந்த சம்பவம் குறித்து அகர்வால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, உணவகத்தின் சிசிடிவி காட்சிகளையும், உணவு சமைத்தவர் மற்றும் அதில் சேர்க்கப்பட்ட பொருள்களின் விவரங்களையும், உணவகத்தின் உரிமையையும் கேட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.