அகர்தலா: திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் டெப்-க்கு கரோனா பாதிப்பு இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேருக்கு நேற்றிரவு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து முகநூலில் அவர் வெளியிட்ட பதிவு,
எனக்கு கரோனா தொற்று இல்லை என்று சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. இருப்பினும், மருத்துவர்கள் அறிவுரைப்படி அடுத்த ஏழு நாள்களுக்கு வீட்டித் தனிமைப்படுத்துதலில் இருக்கப்போவதாக அவர் கூறியுள்ளார். மேலும், வீட்டிலிருந்து வேலை செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், முதல்வரின் மனைவி நிதி டெப் மற்றும் மகள் ஸ்ரேயா ஆகியோருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. ஆனால் அவரது வயதான தாய் மற்றும் மகன் உட்பட மற்றவர்களுக்கு தொற்று இல்லை என்று சோதனை முடிவுகள் வந்துள்ளன.
முன்னதாக, சில நாள்களுக்கு முன்பு பாதுகாப்பு ஊழியர் ஒருவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தானில் அம்பேத்கர் சிலை சேதம்: மக்கள் போராட்டம்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


