ஒடிசாவில் வீட்டிற்குள் நுழைந்த நபர்களை தட்டிக்கேட்ட நபரைத் தாக்கி சிறுநீரைக் குடிக்க கட்டாயப்படுத்தியக் கொடூரம் நடந்தேறியுள்ளது.
ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டிற்குள் திடீரென ஒரு கும்பல் நுழைந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரும் அவரது மனைவியும் அவர்களை நோக்கி கூச்சலிட்டுள்ளனர். இதனை சற்றும் பொருட்படுத்தாத அந்தக் கும்பல் அந்தத் தம்பதியினரின் காரில் நுழைய முயன்றுள்ளனர்.
நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்தத் தம்பதியினர் அவர்களைத் தடுக்க முயன்றுள்ளனர். இதனால் கோபமடைந்த அந்தக் கும்பல் அந்த வீட்டாரை தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் படுகாயமுற்ற அந்த நபரை அடையாளம் தெரியாத அந்தக் கும்பல் தலையை மொட்டையடித்து கொடுமைப்படுத்தியுள்ளது.
பின்னர் அவரை சிறுநீர் குடிக்க நிர்பந்தித்தனர். இந்த சம்பவங்களை பத்ராக் மாவட்ட நீதபதி (டி.எம்) கியானா ரஞ்சன் தாஸ் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய மாவட்ட நீதிபதி, “மேற்கண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.மேலும் 16 பேர் மீது வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.நடந்த சம்பவம் குறித்து சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


