திருவனந்தபுரம்: கேரளத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பெய்த தொடர் கனமழையால் இடுக்கி மாவட்டம் ராஜமாலா பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் பணியாளர் முகாமில் தங்கியிருந்த 80-க்கும் அதிகமான தொழிலாளர்கள் மண்சரிவில் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதேபோன்று நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களின் முழு மருத்துவ செலவையும் அரசே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் மாநில காவல்துறையும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இரவிலும் மீட்பு பணிகளை தொடர்ந்து தொய்வின்றி செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


