கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மறுமதிப்பீட்டில் 2 மதிப்பெண் 100 ஆனது: மாற்றுத்திறனாளி பெண் வைக்கும் கோரிக்கை

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் சுப்ரியா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதப் பாடத்தில் 2 மதிப்பெண் பெற்றதை எதிர்த்து மறு மதிப்பீடு செய்தார். அதில் அவருக்கு 100 மதிப்பெண்கள் கிடைத்த

News image
மறுமதிப்பீட்டில் 2 மதிப்பெண் 100 ஆனது: மாற்றுத்திறனாளி பெண் வைக்கும் கோரிக்கை
Updated On :8 ஆகஸ்ட் 2020, 7:53 am

ANI

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் சுப்ரியா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதப் பாடத்தில் 2 மதிப்பெண் பெற்றதை எதிர்த்து மறு மதிப்பீடு செய்தார். அதில் அவருக்கு 100 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது.

அவரது விடைத்தாளில் குறிப்பிடப்பட்டிருந்த பார்வை மாற்றுத்திறனாளி என்ற குறிப்பை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டதால் இந்த தவறு நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்துஅவர் கூறுகையில், கணிதத்தில் 2 மதிப்பெண் என்று பார்த்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தேன். எனது தந்தைதான் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்தார். அதில் எனக்கு 100 மதிப்பெண் கிடைத்துள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் யாருக்கும் இதுபோல நடக்கக் கூடாது என்று நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 

இது பற்றி சுப்ரியாவின் தந்தை கூறுகையில், எனது மகள் அனைத்துப் பாடங்களிலும் 90க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தார். கணிதத்தில் மட்டும் 2 மதிப்பெண் எடுத்திருந்தார். மறு மதிப்பீட்டுக்கு ரூ.5,000 செலவிட்டேன். நான் ஒரு கணித ஆசிரியர். எனது மகள் கணிதத்தில் நன்கு தேர்ச்சி அடைவார் என்று தெரியும். அதை உறுதி செய்யும் வகையில் 100 மதிப்பெண்களை பெற்றிருந்தார் என்று கூறுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.