விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கர்நாடகத்தில் நிலச்சரிவு: காணாமல் போன 4 பேரை தேடும் பணி தீவிரம்

கர்நாடகத்தில் குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக குடகு துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

News image
கர்நாடகத்தில் நிலச்சரிவு: காணாமல் போன 4 பேரை தேடும் பணி தீவிரம்
Updated On :10 ஆகஸ்ட் 2020, 10:23 am

DIN

குடகு: கர்நாடகத்தில் குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக குடகு துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

பருவமழை காரணமாக கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு, பாலம் சேதம், நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தொடர் கனமழை காரணமாக கர்நாடகத்தில் குடகு மாவட்டத்தில் தலைகாவேரி பகுதியில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஐந்து பேர் சிக்கினர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற மீட்பு படையில் ஒருவர் மீட்கப்பட்டார். மற்ற நான்கு பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து குடகு மாவட்ட துணை ஆணையர் அன்னீஸ் கண்மணி பேசியதாவது, நிலச்சரிவு மீட்பு பணிகளில் மாநில பேரிடர் மீட்பு படையினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் ஒருவர் உடல் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன 4 பேரின் உடல்கள் தேடப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

தொடர் மழையின் காரணமாக சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிரிங்கேரி, குத்ரேமுக், மங்களூர் இடையே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் குடகு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.