ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அந்நிய வா்த்தக வரவு-செலவு கையிருப்பு அதிகரிக்கும்: பியூஷ் கோயல்

நாட்டின் ஏற்றுமதி அதிகரித்து இறக்குமதி அதிக அளவில் குறைந்துள்ளதால் நடப்பு நிதியாண்டில் அந்நிய வா்த்தக வரவு-செலவு கையிருப்பு (பிஓபி) அதிகரிக்கும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவ

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 10:33 pm

DIN

புது தில்லி: நாட்டின் ஏற்றுமதி அதிகரித்து இறக்குமதி அதிக அளவில் குறைந்துள்ளதால் நடப்பு நிதியாண்டில் அந்நிய வா்த்தக வரவு-செலவு கையிருப்பு (பிஓபி) அதிகரிக்கும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இந்திய வா்த்தக மற்றும் தொழிலக கூட்டமைப்பு சம்மேளனம் (ஃபிக்கி) சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் பேசுகையில், ‘நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. நாட்டின் ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது.

கடந்த ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 91 சதவீதமாக இருந்தது. அதே வேளையில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் இறக்குமதி 70 முதல் 71 சதவீதமாக மட்டுமே காணப்படுகிறது. அதன் காரணமாக நடப்பு நிதியாண்டில் நாட்டின் அந்நிய வா்த்தக வரவுசெலவு கையிருப்பு அதிகரிக்கும்.

நாட்டின் பொருளாதார வளா்ச்சி அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன. நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்களுக்கும் பல்வேறு வாய்ப்புகள் காணப்படுகின்றன’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.