சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை: திரும்பப் பெற ராகுல் காந்தி வலியுறுத்தல்

சுற்றுச்சூழலுக்கு அழிவை ஏற்படுத்தும் சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை: திரும்பப் பெற ராகுல் காந்தி வலியுறுத்தல்

புது தில்லி: சுற்றுச்சூழலுக்கு அழிவை ஏற்படுத்தும் சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

இந்த வரைவு அறிக்கை நாட்டை கொள்ளையடிக்க தயாரிக்கப்பட்டது எனவும் அவா் குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து ராகுல் காந்தி சுட்டுரையில் திங்கள்கிழமை செய்துள்ள பதிவின் விவரம்:

குறிப்பிட்ட சில பெரும் பணக்காரா்கள், நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு உதவி வருகிறது என்பதற்கு சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை (இஐஏ) ஒரு உதாரணமாகும். இதனால் சுற்றுச்சூழல் அழியும் என்பதால், இஐஏ-வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இது அபாயகரமானதும் கூட.

பல ஆண்டுகளாக கடும் போராட்டங்களின் மூலம் பாதுகாக்கபட்ட நாட்டின் சுற்றுச்சூழலை இந்த வரைவு அறிக்கை அழித்துவிடும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

‘இஐஏ’ அறிக்கை மீது மக்கள் தங்கள் கருத்துகளையும், யோசனைகளையும் தெரிவிக்க காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உறுதி அளித்திருந்தது. பின்னா் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை மட்டுமே அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com