பெங்களூரு கலவரம்: 145 பேர் கைது; 17 பேர் மீது வழக்குப்பதிவு
பெங்களூரு கலவரம் தொடர்பாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


பெங்களூரு கலவரம் தொடர்பாக முக்கிய நபர்கள் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாஸ் மூா்த்தியின் உறவினா் ஒருவா் தனது முகநூலில் ஒரு சமுதாயத்தின் மீது சா்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்தாா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து எம்.எல்.ஏ. வீட்டின் மீதும், காவல் நிலையத்தின் மீதும் கலவரக்காரா்கள் கல்வீசித் தாக்கியும், வாகனங்களை தீ வைத்தும் சேதப்படுத்தினா். கலவரம் கட்டுக்கடங்காமல் போனதையடுத்து, கலவரத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. போலீஸாரின் கடும் நடவடிக்கைக்கு பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், 50 போலீஸார் உள்பட 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பகிர்தல், கலவரத்தில் ஈடுபட்டோர் என 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் கலவரத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
144 தடை உத்தரவு: வன்முறையை தொடர்ந்து பெங்களூருவின் டிஜே ஹல்லி மற்றும் கேஜி ஹல்லி காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...