லக்னௌ: மூவர்ணக் கொடி நிறத்தில் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு, அனைத்து இந்திய இஸ்லாமிய பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய வாரியத்தின் தலைவர் சைஸ்டா அம்பர் கூறியதாவது:
சுதந்திர தினத்தினை முன்னிட்டு மூவர்ணக் கொடியின் நிறத்தில் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்படும் தகவல் கிடைத்தது. தேசியக் கொடிக்கு அவமரியாதை இழைக்கும் இந்தச் செயலை மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.
முகக்கவசம் என்பது கரோனா பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுவது. ஓரிரு முறை உபயோகித்த பின்னர் தூக்கி வீசப்படுவது. மூவர்ணக் கொடி நிற முகக்கவசங்கள் முறையாக ஒழிக்கப்படுகின்றனவா என்பதை யார் எப்படி கண்காணிப்பது?
தேசத்தின் பெருமைக்குரிய அடையாளத்தை இப்படி வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை அனுமதிக்க கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


