ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 காவலர்கள் வீரமரணம்
ஜம்மு-காஷ்மீரில் நெளகம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல்துறையை சேர்ந்த 2 பேர் வீரமரணம் அடைந்தனர்.


ஜம்மு-காஷ்மீரில் நெளகம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல்துறையை சேர்ந்த 2 பேர் வீரமரணம் அடைந்தனர். ஸ்ரீநகர் பகுதியில் இன்று (வெள்ளிக் கிழமை) அதிகாலை காவல்துறை முகாம்களை நோக்கி பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.
நாட்டில் நாளை (சனிக்கிழமை) சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் தீவிரவாத நடமாட்டத்தை கண்காணிக்க ராணுவத்தினருடன் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று (வியாழக் கிழமை) நடைபெற்ற இந்த ரோந்து பணிகளில் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் செயல்பட்டு வந்த 3 பயங்கரவாத முகாம்களை காவல்துறையினர் தகர்த்தனர்.
இதனிடையே பழிவாங்கும் நோக்கில் ஜம்மு-காஷ்மீரின் நெளகம் பகுதியின் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காவல்துறை முகாம்கள் மீது இன்று அதிகாலை பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 2 காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அப்பகுதி முழுவதும் சுற்றுவளைக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய பயங்கராவாதிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...