இந்தியாவில் ஜூலை மாதத்தில் அதிகரித்த பாமாயில் இறக்குமதி

இந்தியாவில் கரோனா பொதுமுடக்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தளர்வால் பாமாயில் இறக்குமதி ஜூலை மாதத்தில் 1.4% உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஜூலை மாதத்தில் அதிகரித்த பாமாயில் இறக்குமதி
இந்தியாவில் ஜூலை மாதத்தில் அதிகரித்த பாமாயில் இறக்குமதி

இந்தியாவில் கரோனா பொதுமுடக்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தளர்வால் பாமாயில் இறக்குமதி ஜூலை மாதத்தில் 1.4% உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி நாடு முழுவதும் உணவகங்கள், தனியார் விடுதிகள் போன்றவைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. உணவகங்கள் மூடப்பட்டதால் உணவுப் பொருள்களுக்குத் தேவையான எண்ணெய் இறக்குமதி குறைந்தது.

இந்நிலையில் தற்போது தளார்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் உணவகங்கள்  கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றன.

இதனால் ஜூலை மாதத்தில் நாட்டின் சோயா எண்ணைய் இறக்குமதி 52% உயர்ந்து 484,525 டன்னாகவும், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 4% உயர்ந்து 208,747 டன்னாக உள்ளது.

ஹோட்டல் மற்றும் உணவகங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் பாமாயில் தேவை அதிகரித்துள்ளதால் அதன் இறக்குமதி அதிகரித்துள்ளது.

இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து பாமாயிலையும், சோயா எண்ணைய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் போன்ற பிற எண்ணெய்களை அர்ஜென்டினா, பிரேசில், உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்தும் இந்தியா இறக்குமதி செய்கிறது.

பாமாயில் மற்றும் சோயா எண்ணையின் இறக்குமதி ஜூலை மாதத்தில் 13% அதிகரித்து ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட 1.52 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. மார்ச் முதல் மே வரை இறக்குமதி குறைவாக இருந்ததால் எண்ணெய் இருப்புக்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன.” என்று SEA இன் நிர்வாக இயக்குனர் பி.வி. மேத்தா கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கிய 2019-20 சந்தைப்படுத்தல் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதியில் கடும் வீழ்ச்சியால் இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 11.4% குறைந்துள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா கடந்த ஜனவரி மாதம் கட்டுப்பாடுகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com