மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தொடர் மழையால் புணே அணைகளில் அதிகரித்த நீர்மட்டம்

கடந்த ஒரு வாரத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால்  புணேவுக்கு அருகிலுள்ள அணைகளில் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.

News image

புணே அணைகளில் நீர் இருப்பு அதிகரிப்பு

Updated On :15 ஆகஸ்ட் 2020, 12:40 pm

கடந்த ஒரு வாரத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால்  புணேவுக்கு அருகிலுள்ள அணைகளில் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. ஜூலை 31 அன்று 9.86 டி.எம்.சி ஆக இருந்த நீர் இருப்பு கடந்த பதினைந்து நாட்களில் 21.07 டி.எம்.சி. ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, புணே நகரத்திற்கு குடிநீர் வழங்கும் நான்கு அணைகளின் மொத்தக் கொள்ளளவு 72.30 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து, கடக்வாஸ்லா அணையில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வெள்ளிக்கிழமை ன்ஷெட் அணையில் 80 சதவீதமும், வராஸ்கான் அணையில் 66 சதவீதமும், பவானா அணையில் 58 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது.

ஆகஸ்ட் 20 வரை புணேவில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.