ஒடிசாவில் 2 நாள்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள்
ஒடிசா மாநிலத்தில் கரோனா பரிசோதனை அதிகப்படுத்துவதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது.

Odisha conducts more than 1 lakh COVID-19 tests in two days

Odisha conducts more than 1 lakh COVID-19 tests in two days
ஒடிசா மாநிலத்தில் கரோனா பரிசோதனை அதிகப்படுத்துவதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது.
அந்தவகையில், ஒடிசாவில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் ஒரு மில்லியன் சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
கஞ்சம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களில் 14,953 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் பல மாநிலங்களை விட அதிகமாக உள்ளது. மேலும், கஞ்சமில் பாதிப்பு விகிதம் தொடர்ந்து 3.6 சதவீதமாக குறைந்துள்ளது.
மற்ற மாநிலங்களை விட ஒடிசாவில் இறப்பு விகிதம் 0.58 சதவீதமாக குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் நிறுவப்பட்ட கரோனா மருத்துவமனைகள் மற்றும் கரோனா பராமரிப்பு மையங்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்துதல் ஆகியவை முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதே கரோனா குறைவுக்கு காரணமாகும் என்று அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...