மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

ஒடிசாவில் மேலும் 2,244 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 62,294

ஒடிசாவில் இன்று மேலும் 2,244 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 62,294 ஆக உயர்ந்துள்ளது. 

News image

Odisha records 2,244 new COVID-19 cases, state count reaches 62,294

Updated On :17 ஆகஸ்ட் 2020, 9:05 am

ANI

ஒடிசாவில் இன்று மேலும் 2,244 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 62,294 ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டின் பல மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. 

இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,224 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. மேலும் ஒரேநாளில் 1,550 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

தற்போது 19,612 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை ஒடிசாவில் நோய்த் தொற்று பாதித்த 42,276 பேர் குணமடைந்துள்ளனர். 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 57,982 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளன. மொத்த பாதிப்பு  2,64,7,664 ஆக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.