அருணாசல பிரதேச துணை முதல்வருக்கு கரோனா தொற்று இல்லை
அருணாசல பிரதேச துணை முதல்வர் சௌனா மெய்னுக்கு கரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Arunachal Deputy CM tests negative for COVID-19

Arunachal Deputy CM tests negative for COVID-19
அருணாசல பிரதேச துணை முதல்வர் சௌனா மெய்னுக்கு கரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
துணை முதல்வர் கடந்த ஐந்து நாள்களாக தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில், தனக்கு கரோனா தொற்று இல்லையென்று அவரின் சோதனை முடிவுகளை டிவிட்டரில் அவரே பதிவிட்டுள்ளார்.
வீட்டு தனிமையில் இருந்த பின்னர் இன்று காலை 2-வது விரைவான ஆன்டிஜென் சோதனை எடுக்கப்பட்டபோது அவருக்குத் தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் அனைவரும் கரோனா தடுப்புக்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நோய் எதிர்ப்பு சக்தியைப் அதிகப்படுத்திக்கொள்ளவும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அருணாசல பிரதேசத்தில் கரோனா தொற்றுக்கு தற்போது 888 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,808 பேர் குணமடைந்துள்ளனர். 5 பேர் தொற்று காரணமாக இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...