மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

நாட்டில் இன்று அதிகபட்சமாக 60,091 பேர் கரோனாவிலிருந்து மீண்டனர்

நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று அதிகபட்சமாக 60,091 பேர்  குணமடைந்தனர். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக உயர்ந்துள்ளது.

News image

நாட்டில் இன்று அதிகபட்சமாக 60,091 பேர் கரோனாவிலிருந்து மீண்டனர்

Updated On :19 ஆகஸ்ட் 2020, 10:32 am

ANI


புது தில்லி: நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று அதிகபட்சமாக 60,091 பேர்  குணமடைந்தனர். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக உயர்ந்துள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி, இந்தியாவில் கரோனா தொற்று பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டியதை அடுத்து ஒட்டுமொத்தமாக கரோனாவில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 73.64% ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை கரோனா பாதித்து பலியானோர் விகிதம் 1.91 ஆகக் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி கரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 20,37,870 ஆகவும், சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 6,76,514 ஆகவும் உள்ளது. இதன் மூலம் இதுவரை கரோனா பாதித்தவர்களில் தற்போது சிகிச்சையில் இருப்பது நான்கில் ஒரு பங்கினர் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.