மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

உ.பி.யில் கரோனா பாதித்த பெண் மருத்துவமனையில் தற்கொலை

உத்தரப் பிரதேசம், மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள மகாவீர் பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ வார்டில் கரோனா பாதித்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. 

News image

COVID-19 positive woman dies by suicide at Moradabad hospital

Updated On :20 ஆகஸ்ட் 2020, 5:55 am

ANI

உத்தரப் பிரதேசம், மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள மகாவீர் பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ வார்டில் கரோனா பாதித்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. 

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் விடியோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் கரோனா பாதித்த பெண் ஒருவர் ஜன்னலுக்கு வெளியே குதிப்பது தெரிய வந்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) குற்றவியல் கண்காணிப்பாளர் அசோக் குமார் கூறியதாவது, 
கரோனா தொற்று பாதித்து பெண் ஒருவர் டி.எம்.யூ மருத்துவ வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஜன்னலின் வழியே குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். 

சி.சி.டி.வி காட்சிகளை காவல்துறையினர் கைபற்றியுள்ளனர். தற்கொலைக்கு காரணம் என்ன என்பதைக் விசாரணை செய்து வருவதாகவும் காவல்துறை அதிகாரி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.