அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லியில் கடந்த 11 நாள்களில் 80% பருவமழை

தில்லியில் கடந்த 11 நாட்களில் இந்த ஆண்டுக்கு தேவையான 80 சதவிகித மழை பெய்துள்ளதாக நீர் தேக்கம் குறித்த நகர விவகாரத்துறை அமைச்சர் ஹெச்.எஸ்.புரி தெரிவித்துள்ளார்.

News image
தில்லியில் கடந்த 11 நாள்களில் 80% பருவமழை
Updated On :20 ஆகஸ்ட் 2020, 11:23 am

DIN

புதுதில்லி: தில்லியில் கடந்த 11 நாட்களில் இந்த ஆண்டுக்கு தேவையான 80 சதவிகித மழை பெய்துள்ளதாக நீர் தேக்கம் குறித்த நகர விவகாரத்துறை அமைச்சர் ஹெச்.எஸ்.புரி தெரிவித்துள்ளார்.

தில்லியில் பருவமழை காரணமாக கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் தில்லி நகரின் முக்கிய சாலைகள் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் இன்று காலை முதல் தில்லி நகர சாலைகளில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 

இதனிடையே தில்லியில் கடந்த 11 நாட்களில் 80 சதவிகித மழை பெய்துள்ளதாக நகர விவகாரத்துறை அமைச்சர் ஹெச்.எஸ்.புரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் பேசியதாவது, டெல்லி அரசு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற நிர்வாகங்கள் ஆண்டுதோறும் பருவமழையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மழையால் பிரச்சனைகளை சந்திக்கும் மக்களது இன்னல்களை அறிந்து அதனை போக்கமுடியும் என நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.