தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

செப்டம்பர் 21ல் கூடும் மத்தியப் பிரதேச சட்டப்பேரவை

மத்தியப் பிரதேச மாநில சட்டபேரவைக்கூட்டம்  செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி நடைபெறும் என சட்டப்பேரவை செயலர் ஏ.பி.சிங் சனிக்கிழமை அறிவித்தார்.

News image

மத்தியப் பிரதேச சட்டப்பேரவை

Updated On :22 ஆகஸ்ட் 2020, 12:13 pm

DIN

மத்தியப்பிரதேச மாநில சட்டபேரவைக்கூட்டம்  செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி நடைபெறும் என சட்டப்பேரவை செயலர் ஏ.பி.சிங் சனிக்கிழமை அறிவித்தார்.

ஜூலை மாதம் நடைபெற இருந்த மாநில சட்டப்பேரவைக் கூட்டம் கரோனா தொற்று பரவலால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி நடைபெறும் என மத்தியப் பிரதேச சட்டப்பேரவை செயலர் ஏ.பி.சிங் அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 21ல் தொடங்கி மூன்றுநாள் நடைபெற உள்ள கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்னைகள் விவாதிக்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடர் மார்ச் 24 அன்று நடைபெற்றது. முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தனது பெரும்பான்மையை நிரூபித்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தது.

இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் 23ஆம் தேதி மத்தியபிரதேச முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.